தருமபுரி
தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளையொட்டி மாவட்ட கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளையொட்டி தருமபுரி மாவட்ட கழகம் சார்பில் தருமபுரி நகரில் பெரியார் மன்றம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு நகர செயலாளர் பூக்கடை ரவி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கோவிந்தசாமி,சம்பத்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.பின்னர் பெரியாரின் சமூக நீதி உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்வில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி, அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் அசோகன்,சின்.அருள்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்