மறைந்த திராவிடர் கழகத் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி அரியலூர் செட்டி ஏரிக்கரையிலுள்ள அவரது சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக சார்பில், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவும், மாவட்டச் செயலருமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகரச் செயலர் செந்தில், மாவட்ட அம்மா பேரவைச் செயலர் சங்கர், இணைச் செயலர் பிரேம்குமார், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர்மகளிர் அணிச் செயலர் ஜீவா அரங்கநாதன், நிர்வாகிகள் ஜோதிவேல், வழக்குரைஞர் வெங்கடாஜலபதி செல்ல.சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.