திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலயத்தில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீபாடைக் கட்டி மாரியம்மன் பக்தர்கள் சேவா சங்கமும், திருச்சி அப்போலோ மருத்துவமனையும் இணைந்து மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம் முகாமில் நூற்றுக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் பயனடைந்தனர்,தொடர்ந்து பக்தர்களுக்கு நீர்மோர்,மதியம், இரவு அன்னதானம் வழங்குதலும் நடைபெற்றது.அன்று மகா மாரியம்மன் ஆலயத்திற்கு வருகை தந்த சிவ சேனா கட்சியின் மாநில செயல் தலைவர் சசிகுமார்ஜி ஆலயத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு, ஸ்ரீ பாடைகட்டி மாரியம்மன் பக்தர்கள் சேவா சங்கமும்,திருச்சி அப்போலோ மருத்துவமனையும் இணைந்து நடத்திய மருத்துவ முகாமையும் பார்வையிட்டு சேவா சங்கத்தினரை பாராட்டினார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறுகையில், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் உள்ள மகா மாரியம்மன் ஆலயத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்,
ஆனால் பக்தர்களுக்கும்,பொது மக்களுக்கும் தேவையான சுகாதார வளாகம் பழுதடைந்து உள்ளதால் பக்தர்களும், பொதுமக்களும் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
தற்போது பழுதடைந்து உள்ள சுகாதார வளாகம் அன்புமணி ராமதாஸ் எம்பி தொகுதி நிதியில் இருந்து கட்டப்பட்டது, ஆனால் தொடர் பராமரிப்பு இல்லாத காரணத்தினால் தற்போது பழுதடைந்து இடியும் நிலையில் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய நவீன சுகாதார வளாகம் கட்டித்தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
உடன் சேவா சங்கத்தின் தலைவர் எம். எம்.சண்முகவேல், செயலாளர் பி. சாமிநாதன்,ஆலோசகர் தலைமை அர்ச்சகர் இரா.செல்வம் பூசாரி,பொருளாளர் வி. எஸ். குமார்,துணைத் தலைவர்கள் என். மாரிமுத்து,ப. பெத்த பெருமாள்,ஜி. சண்முகசுந்தரம் யாதவ், துணை செயலாளர்கள் க. குமரன்,என் சத்தியா (எ) கலியபெருமாள், வி.ஏ. வி.சூரியமூர்த்தி, ஊடகப்பிரிவு செயலாளர் க.அப்பு (எ)ரத்தீஷ் பாபு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.