ஆதி சைவ சிவாச்சாரியார்கள் கூட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

ஆதிசைவ சிவாச்சாரியார்கள் கூட்டமைப்பு நிறுவன தலைவர் பொதுச்செயலாளர் கலிபோர்னியா சுவாமிநாதன் சிவாச்சாரியார் அவர்கள் தலைமையில் மற்றும் கோவை மாவட்ட தலைவர் சிவஸ்ரீ மணிகண்டன் சிவாச்சாரியார் மற்றும் செயலாளர் செல்வம் சிவாச்சாரியார் முன்னிலையில் சென்னிமலை மற்றும் சிவன்மலையில் மிகப்பெரிய கூட்டமைப்பு கலந்தாய்வு நிகழ்வு நடைபெற்றது.

இந்த கலந்தாய்வு கூட்டத்தில் சிவன்மலை சென்னி மலையை சேர்ந்த சிவாச்சாரியார்கள் சிவஸ்த்ரிகள் இளைஞர் பேரமைப்பு நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களுடைய கூட்டமைப்பை வலுவாக ஒன்றாக நடத்துவதற்கு ஆதரவு கரம் தருவதாக உறுதியளித்துள்ளார்கள்..
சென்னி மலையில் சிவஸ்ரீ தபராஜ் சிவாச்சாரியார் கார்த்திகேய சிவாச்சாரியார் செந்தில் சிவாச்சாரியார்கள் இவர்கள் தலைமையிலும் சிவ ஸ்திரிகள் ஸ்ரீமதி சிவரஞ்சனி மற்றும் ஸ்ரீமதி மீனாட்சி ஸ்ரீமதி சௌந்தர்யா ஸ்ரீமதி திவ்யா ஆகியோர்கள் தலைமையில் ஏராளமான சிவஸ்திரிகள் கலந்து கொண்டார்கள்.

அதுபோலவே சிவன் மலையில் சிவஸ்ரீ மகேஷ் சிவாசாரியார் மற்றும் பாடசாலை முதல்வர் சிவஸ்ரீ விக்னேஷ் சிவாச்சாரியார் இவர்கள் தலைமையில் 50க்கு மேற்பட்ட சிவாச்சாரியார்கள் மற்றும் சிவ ஸ்திரிகள் ஸ்ரீமதி லலிதா ஸ்ரீமதி கற்பாகம்பாள் மற்றும் பல சிவஸ்திரிகள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கோவை தொண்டாமுத்தூர் ரோட்டில் அமைந்துள்ள பாரம்பரிய ஹோட்டலில் நிறுவன தலைவர் கலிபோர்னியா சுவாமிநாதன் சிவாச்சாரியார் தலைமையில் கோவை மாவட்ட தலைவர் சிவஸ்ரீ மணிகண்டன் சிவாச்சாரியார் முன்னிலையில் கோவை மாவட்ட அனைத்து நிர்வாகிகள் சிவஸ்த்ரிகள் இளைஞர் பேரமைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கலந்தாய்வுக் கூட்டத்தில் வரும் மாதங்களில் சிவாச்சாரியார் கூட்டமைப்பை கொங்கு மண்டலத்தில் மிகச் சிறப்பாக வலுப்படுத்துவது குறித்தும் சிவஸ்ரிகள் அமைப்பை வலுப்படுத்துவது குறித்தும் ஏனைய அமைப்புகளை ஒன்று திரட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு தீர்மானிக்கப்பட்டது.
இறுதியாக சுவாமிநாதன் சிவாச்சாரியாருக்கு நன்றி தெரிவிக்கபட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *