தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலத்திலும் வாரம்தோறும் புதன்கிழமை மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது
அதன்படி இன்று கிழக்கு மண்டலத்தில் மேயர் ஜெகன் தலைமையில் முகம் நடைபெற்றது முகாமில் மேயர் ஜெகன் பேசுனகயில் முதலமைச்சர் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகரில் பணியில் நடைபெற்று வருகிறது துறைமுகத்தில் உள்ள பூங்கா 8 கோடி மதிப்பில் சென்னை மெரினா பீச் மாதிரி அமைக்கப்பட உள்ளது மாநகராட்சியிடம் அந்தப் பூங்காவை ஒப்படைக்கப்பட்டுள்ளது
ரயில் சேவை அதிகமாக உள்ளதால் போக்குவரத்து இடைவெளி ஏற்படுகிறது மேலும் ஒரு வாசல் அமைக்கப்பட உள்ளது
மழை வெள்ளம் வரும் காலத்துக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது அண்ணா பேருந்து நிலையத்தில் கழிப்பறை சுத்தமாக இல்லை என்ற புகார் எடுத்து தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது துரிதமான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது
தூத்துக்குடி மாநகரில் கேரினப முற்றிலும் அறவே ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறோம் மக்கள் தான் அதனை முற்றிலும் தடுக்க வேண்டும் மக்கள் கேரிபை வாங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மேயர் ஜெகன் கூறினார் இதனை அடுத்து பொதுமக்கள் மனுக்களை அளித்தனர் மனு அளித்த சில நிமிடத்தில் இரண்டு மனுவுக்கு தீர்வு காணப்பட்டு மனு அளித்த பொது மக்களுக்கு ஆணை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
நிகழ்ச்சியில் உதவி ஆணையர் சொர்ணலதா மாநகராட்சி இளநிலை பொறியாளர் சரவணன் மண்டல தலைவர் கலைச்செல்வி மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவர் சுரேஷ்குமார் மாமன்ற உறுப்பினர் பேபி ஏஞ்சலின் மற்றும் மாமண்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.