ராஜபாளையத்தில் ஊராட்சி செயலாளர்களை அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க கோரி அரசுக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்!
தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி செயலாளர்கள் தங்களது ஓய்வூதிய திட்டத்தில் தமிழக அரசு தங்களையும் இணைக்க கோரி உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு 40,000 கடிதங்கள் அனுப்பும் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மாநில துணைத்தலைவர் ராமசுப்பு தலைமையில் கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. தலைமை தபால் அலுவலகத்தில் வைத்து ராஜபாளையம் தலைமை அஞ்சல் நிலைய அதிகாரியிடம் 120 கடிதங்கள் வழங்கப்பட்டது.
கடிதத்தில் ஊராட்சி செயலாளர்கள் சிறப்பு காலம் வரை ஊதிய விகிதத்தில் இருந்து காலமுறை ஊதிய விகிதத்திற்கு மாற்றப்பட்டு ஒன்றிய அலுவலகங்களில் பணியப்படுத்தப்படும், பதிவு எழுத்தர் ஊதிய விகிதம், போன்றவைகள் குறித்து எவ்வித சலுகைகளும் வழங்கப்படவில்லை.
தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்திலும் இணைக்கப்படவில்லை. மாநில அமைப்பு மூலம் ஊராட்சி செயலர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை மையமாக வைத்து மாநில அளவிலான 2 கட்ட போராட்டம் நடவடிக்கையில் இரண்டாம் கட்டமாக அனைத்து ஊர்களில் இருந்தும் முதல்வர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், கூடுதல் தலைமைச் செயலர், இயக்குனருக்கு 40,000 கடிதங்கள் அனுப்பும் போராட்டத்தில் தற்போது ஈடுபட்டுள்ளோம்.
மேலும் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக முழுவதும் ஊராட்சி செயலாளர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் மாநிலத் துணைத் தலைவர் ராமசுப்பு தெரிவித்தார்.