சிட்டிலில் ஊராட்சி மலைதாங்கி பகுதியில் ரூ 5.50-கோடி மதிப்பில் திட்டபணிக்கு அரூர் அதிமுக எம்எல்ஏ சம்பத்குமார் பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.
தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட சிட்டிலிங் ஊராட்சி மலைத்தாங்கி பகுதியில் பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.3 கோடி மதிப்பீட்டிலான மேம்பாலம் கட்டவும் ரூ.2.50 கோடி மதிப்பீட்டிலான தார் சாலை அமைக்கவும் அரூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் & ஒன்றிய கழக செயலாளர் .வே.சம்பத்குமார் MLA பூமி பூஜை செய்து பணியினை தொடங்கிவைத்தார்.
இதில் அரூர் ஒன்றிய செயலாளர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர் ஆர்.ஆர்.பசுபதி,
சிட்லிங் ஊராட்சி மன்றத் தலைவர் மாதேஸ்வரி மஞ்சுநாத். முன்னிலை வகித்தார், இதில் துணை தலைவர் வேலாயுதம், முருகன் முருகேசன் தங்கவேலு வெங்கட்ராமன் அண்ணாதுரை ஆன்டி மல்லிகா, செல்வம், மூர்த்தி,அபி, கதிர்வேல், வடிவேல், வைத்தியலிங்கம், ராஜ்,வேடி உள்ளிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்துகொண்டனர்