மேயர் ஜெகன் தலைமையில் உறுதிமொழி.

தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலகத்தில் வைத்து மாநகராட்சி மேயர் ஜெகன் தலைமையில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா முன்னிலையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. உறுதிமொழியில் மக்களாட்சியின் மீது பற்று உடைய இந்திய குடிமக்களாகிய நாம் நம்முடைய நலன் கருதும் மரபுகளையும் சுதந்திரமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்றும். மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும். மதம். இனம். ஜாதி. வகுப்பு. மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்த ஒரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்று உறுதிமொழிகிறோம். என்று மேயர் ஜெகன் உறுதிமொழி வாசிக்க அதிகாரிகள் பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் துணை ஆணையர் சரவணகுமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *