ராஜபாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை யொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. ராஜபாளையத்தில் அமைந்துள்ள திருப்பதி திருமலை தேவஸ்தானம் அலுவலகத்தில் வெங்கடேச பெருமாள் சுவாமிக்கு அதிகாலையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து 18 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்று சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்தக் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை உற்சவ விழாவில் மூலவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பலித்தார்.
இதேபோல வேட்டை வெங்கடேச பெருமாள் கோவில், ராமசாமி கோவில், கோதண்ட ராமர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.