பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் மருவத்தூர் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ மகாமுனி ஆகிய தெய்வங்களுக்கு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வருடம் தோறும் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டும் மழை வேண்டி பொதுமக்கள் பொங்கல் மாவிளக்கு வைத்து சாமிக்கு அபிஷேகம் செய்து வழிபாட்டர்.
மேலும் மழை வேண்டி பொன்னர் சங்கத்தின் சார்பாக நாடகமும் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.