மதுரை, மாடக்குளம் பகுதியில் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில், அரசு முதுகலை பட்டதாரி மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இதில் கல்லூரி மாணவர் கள் 60 பேர் தங்கி யுள்ளனர். இந்த விடுதியில் வார்டனாக பணிபுரிந்த சங்கரசபாபதி, சில தவறான கருத்துக்களை பொது வெளியில் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்த் விசாரணை நடத்தி, வார்டன் சங்கர சபாபதியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக்
கண்டித்தும், வார்டனுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரியும் மாடக்குளம் விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விடுதி வளாகத் தினுள் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.