செங்குன்றம் செய்தியாளர்
கொளத்தூர் செங்குன்றம் சாலையில் மூகாம்பிகை சாலை சந்திப்பு அருகே அமைந்துள்ள அரசு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக போதை தடுப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் போதை தடுப்பு வாசகங்களை பதாகைகளில் கைகளில் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் .
கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் ஏராளமானோர் சாலையின் இரு புறங்களிலும் ஓரமாக நின்று வாகன ஓட்டுகளுக்கும் பொது மக்களுக்கும் போதையினால் ஏற்படும் தீங்குகளை எடுத்துரைத்து அதனை நிறுத்த அனைவரையும் கேட்டுக் கொண்டனர். இந்நிகழ்வில் கொளத்தூர் காவல் நிலைய போலீசார் மற்றும் வில்லிவாக்கம் போக்குவரத்து காவல் நிலைய போலீஸார்கள் கலந்துகொண்டனர்.