மத்திய பிரதேசம் மேத்தா தலாப் என்ற இடத்தில் 27–ஆம் தேதி தொடங்கி 29 வரை அகில இந்திய கயாக்கிங் & கனோயிங் சங்கம் நடத்தும் 9–வது கனோ– போலோ சேம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க இரயில் மூலம் செல்லும் புதுச்சேரியைச் சேர்ந்த கேப்டன் லோகேஷ்வரன் தலைமையிலான அணியின் 27 வீரர்களை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் சீருடை வழங்கி, வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

இதற்கான ஏற்பாடுகளை திமுக கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர் சங்கர் (எ) சிவசங்கர் , விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் செய்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் வேலன், பொறியாளர் அணி அமைப்பாளர் அருண்குமார், பாபு, சேகர், அருள் மற்றும் விளையாட்டு அணியினர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *