புதுச்சேரி காரைக்கால் சார்பு ஆட்சியர் பூஜா காரைக்காலில் உள்ள வெடி கடைகளில் திடீர் ஆய்வு செய்தார்கள். காரைக்கால் மாவட்டத்தில், வெடிமருந்து மற்றும் பட்டாசுகள் விற்பனை செய்யும் கடைகளில், பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி, தரமான முறையில் வெடிபொருட்களைக் கையாள்கிறார்களா என்றும், விதிமுறைகளை மீறாமல் பட்டாசு விற்பனை செய்யப்படுகிறதா என்றும், விதிகளை மீறி வெடிபொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுத்தல், வெடிபொருள் விபத்துகளைத் தவிர்ப்பது, கடைகளில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதா எனவும், தீயணைப்பு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதா எனவும் கடைகளில் சார்பு ஆட்சியர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.
மேலும் வெடிப்பொருள்கள் கடைகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதா என்பதைச் சார்பு ஆட்சியர் அவர்கள் சரிபார்த்தனர். இந்த ஆய்வின்போது துணை வட்டாட்சியர் அரவிந்தன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.