புதிய தலைமுறை தொலைக்காட்சியின் புதுச்சேரி மூத்த செய்தியாளர் ரகுமான் உடல் நலமின்றி காலமானார் என்ற செய்தி இன்று கேட்டதும் மிகவும் வருத்தத்திற்கு உள்ளாகினேன்
நேரடி ஒளிபரப்புகளில் அவர் புதுச்சேரி அரசியல் குறித்து மக்களுக்கு பல விஷயங்களை எடுத்துக் கூறியது நினைவு நினைவுக்கு வருகிறது…
அனைத்து தரப்பினரிடமும், பொதுமக்களிடமும், அரசியல்வாதிகளிடமும், அதிகாரத்தில் உள்ளவர்களிடமும் அன்புடன் பழகி, தேவையான செய்திகளை உலகிற்கு சரியான பாதையில் எடுத்துக் கூறியுள்ளார்
அவர் மறைவுக்கு தனிப்பட்ட முறையிலும், நான் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சி சார்பிலும், கமலா அறக்கட்டளை சார்பாகவும் அவருடைய குடும்பத்தினருக்கும், புதுச்சேரி பத்திரிகை சகோதரர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்….
ஆழ்ந்த வருத்தத்துடன்
மு. வைத்தியநாதன்
காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர்
லாஸ்பேட்டை தொகுதி…