அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள 66.மேட்டுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி மண்டல பூஜை விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் மஹா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, எஜமானர் அழைப்பு, சுதர்சன பூஜை, சுமங்கலி பூஜை, மஹா பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜையுடன் யாக சாலையில் இருந்து சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி அழகர்கோவில், ராமேஸ்வரம் உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோவிலை சுற்றி வலம் வந்து வானத்தில் கருடன் வட்டமிட கோவில் கருவறையில் அமைந்துள்ள முத்தாலம்மன் சுவாமிக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மண்டல பூஜை நடைபெற்றது.
இதில் சுற்று சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். கோவில் சார்பாக அனைவருக்கும் பூஜை பொருட்களும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை
66.மேட்டுப்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.