அலங்காநல்லூர்.செப்.30-மதுரை மேற்கு தெற்கு ஒன்றியம்
சிக்கந்தர்சாவடியில் அதிமுக சார்பில் தனியார் மஹாலில் செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், தலைமை தாங்கினார். மாநில மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகாமுனியசாமி, மாநில அம்மா பேரவை துணை செயலாளர்கள் வெற்றிவேல், வக்கீல் திருப்பதி, வாடிப்பட்டி ராஜேஷ்கண்ணா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.பி.உதயகுமார், கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் அவர் பேசும்போது புரட்சித்தலைவி செயல்படுத்திய திட்டங்களில் தாலிக்கு தங்கம் மற்றும் ரொக்க பணம் ஆகியவற்றை நான் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தபோது எண்ணற்ற மக்களுக்கு இந்த கரங்களால் வாரி வாரி வழங்கினோம்
அதேபோன்று முதியோர் உதவித்தொகை வருவாய்த் துறையினர் மூலம் கணக்கெடுத்து தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது அம்மா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் இந்த அரசு நிறுத்திவிட்டது என்று கூறினார்.. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசன், கருப்பையா, மாணிக்கம், மகேந்திரன், எஸ்.எஸ்.சரவணன், சமயநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மலையாளம், அம்மா பேரவை மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன், மாவட்ட மகளிரணி செயலாளர் வக்கீல் லெட்சுமி, துணைச் செயலாளர் மருதாயி, கவுன்சிலர் வனிதாகட்டத்தேவன், கூட்டுறவு முன்னால் தலைவர்
மலர்கண்ணன், துணைத் தலைவர் ராகுல், ஒன்றிய கவுன்சிலர் ஜெகதா ராதாகிருஷ்ணன், அம்முலோகேஸ்வரன், கிளை நிர்வாகி சாமிநாதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..