தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் என்.ஜி.ஓ காலணியில் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவி ஏற்பதை முன்னிட்டு தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வழிகாட்டுதலின்படி மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஸ்ரீகுமார் மற்றும் ஒன்றிய கழக செயலாளர்கள் கடற்கரை, கிறிஸ்டோபர் ஆகியோர்களின் முன்னிலையில் பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் சுந்தரபாண்டியன், வழக்கறிஞர் சதீஷ், மனோகரன், நித்திஷ், காவல் கிளி, ஈஸ்வரன், பாலசுப்பிரமணியன், லட்சுமணன், பாலு, ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.