பொள்ளாச்சி நகர திமுக சார்பாக பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடிய திமுகவுங்க விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி ஏற்பதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுகவினர்கொண்டாடி வருகின்றன அதன் தொடர்ச்சியாக பொள்ளாச்சியில் நகரச் செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் மத்திய பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உதயநிதி வாழ்க என்று கோஷங்கள் எழுப்பி மகிழ்ந்தனர்
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கியதற்கும் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர் பதவி வழங்கியதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடினார் கலைஞர் முதல்வராக இருந்தபோது ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கிய போது இது பதவி அல்ல பொறுப்பு என கூறிய இன்றைய முதல்வர் ஸ்டாலின்வாசகத்தை நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார் அவர் இளைஞர் அணிச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முழுவதும் இளைஞர்களை திமுகவில் அதிக அளவில் சேர்ந்து கட்சி பற்றுதலோடு இணைந்து வருகின்றனர் அந்த எழுச்சியின் காரணமாக வரும் தேர்தலில் இளைஞரின் தேர்தல் பணிகள் மிக சிறப்பாக இருப்பதோடு மட்டுமில்லாமல் மிக எழுச்சியான மிகப்பெரிய வெற்றி பெற்று தருவார்கள் என பொள்ளாச்சி நகரச் செயலாளர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்
இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் நகரத் துணைச் செயலாளர் தர்மராஜ் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்