தாராபுரம் செய்தியாளர் பிரபு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த சின்ன மருதூர், குமாரபாளையம் கிராமங்களில் பனை விதைகள் நடவு செய்யும் பணி நடைபெற்றது.
பனை மேம்பாட்டு இயக்கம் 2024-25:-
பனை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் இதர கைவினைப் பொருட்களின் தேவை அதிகரித்து வருவதாலும், பனை மரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நோக்கிலும் 2021-22 ஆம் ஆண்டு முதல் “பனை மேம்பாட்டு இயக்கம் அறிமுகப்படுத்தபட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பனை மரத்தின் முக்கியத்துவம்:-
பனை மரங்கள் புயல் மற்றும் காற்றினால் அதிக அளவில் பாதிப்படையாமல் நிலைத்து நிற்கும் தன்மை உடையவை. பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் கால நிலை மீள்தன்மைக்கு உதவுகிறது. மண்ணை நிலைப்படுத்துவதன் மூலம் மண் அரிப்பை தடுக்கிறது மற்றும் மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கிறது.
பனை விதைகள் நடவு:-
திருப்பூர் மாவட்டம் மூலனூர் வட்டாரத்தில் நேற்று தோட்டக்கலைத்துறையின் பனை மேம்பாட்டு இயக்கம் 2024-25 கீழ் 1925 பனை விதைகள் இலக்கு அளிக்கப்பட்டது. எனவே இத்திட்டதின் கீழ் சின்ன மருதூர் மற்றும் குமாரபாளையம் ஆகிய கிராமங்களில் பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மூலனூர் ஒன்றியக்குழு துணைத் தலைவர் திரு. பழனிச்சாமி அவர்கள் பனை விதைகளை நடவு செய்து இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சின்னமருதூர் பஞ்சாயத்து தலைவர் திருமதி. செந்தில்வடிவு அவர்களும் குமாரபாளையம் பஞ்சாயத்து தலைவர் திரு. செல்லமுத்து அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை அலுவலர்கள் வினோத், காஜாமைதீன், நாகலட்சுமி மற்றும் ஜான்சிராணி ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும் இனி வரும் நாட்களில் மீதமுள்ள பனை விதைகளை திட்டமிடப்பட்டுள்ளது. மற்ற ஊராட்சி பகுதிகளில் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது..