விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஐந்தாவது தமிழ்நாடு மாநில கைப்பந்து சாம்பியன்ஷிப் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான போட்டிகள் தொடங்கியது.
தமிழ்நாடு மாநில கைப்பந்து கழகம், விருதுநகர் மாவட்ட கைப்பந்து கழகம், ராஜபாளையம் நகர கைப்பந்து கழகம், நாடார் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்தும் மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் ராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊர்க்காவல் படை மைதானத்தில் இரவு பகல் மின்னொளி வெளிச்சத்தில் நடைபெற்று வருகிறது.
இதன் துவக்க விழா நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தலைமையில் துவங்கியது. விருதுநகர் மாவட்ட கைப்பந்து கழக அமைப்புச் செயலாளர் செல்வகணேஷ் வரவேற்று பேசினார்.
மேலும் ஊர்க்காவல் படை உதவி தளபதி பி.ஜே. ராம்குமார்,ஏ கே டி தர்மராஜா பள்ளிகளின் டிரஸ்டி
ஏ கே டி கிருஷ்ணமராஜு, அர்ஜுனா விருது பெற்ற வீரர் சேதுராமன், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி மேலாளர் சங்கரேஸ்வரன், விருதுநகர் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் ஆர்.கே. துரை சிங், தமிழ்நாடு மாவட்ட கைப்பந்து கழக துணை சேர்மன் சீலன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார் .
முதலாவது போட்டி சென்னை வைஷ்ணவி கல்லூரி மாணவர்களும் விருதுநகர் வி.எச்.என். கல்லூரி அணியும் மோதியது. இதில் 25-4, 25-8 புள்ளிக் கணக்கில் வைஷ்ணவா அணி வெற்றி பெற்றது. அடுத்த நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை எஸ் ஆர் எம் கல்லூரி ஹியூமனிடீஸ் அணியும், அருள்மிகு கலசலிங்கம் கல்லூரி கிருஷ்ணன் கோயில் அணியும் ஆடியது. இதில் 25-16, 25-22 புள்ளி கணக்கில் எஸ்ஆர்எம் கல்லூரி வெற்றி பெற்றது. அடுத்து திருச்சி ஜமால் முகமது அணியும், கோவை ஸ்ரீ சக்தி கல்லூரி அணியும் மோதியது. இதில் திருச்சி ஜமால் முகமது அணி 21- 25, 25-10, 25-18 புள்ளிக் கணக்கில் திருச்சி அணி வெற்றி பெற்றது.
தொடர்ந்து நாகர்கோவில் நூர் இஸ்லாம் கல்லூரியும், பொள்ளாச்சி எஸ்.டி.சி. கல்லூரியும் மோதியது. இதில் நாகர்கோவில் அணி 25-18, 25- 19 புள்ளி கணக்கில் நாகர்கோவில் அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து பகல் இரவு ஆட்டங்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. போட்டிகளில் 38 ஆண் ஆண்கள் அணியும், 28 பெண்கள் அணியும் விளையாடி வருகின்றனர்.