பெரியகுளம் அருகே தாமரைக் குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது தாமரைக் குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழாவிற்கு பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்
இந்த நிகழ்ச்சிக்கு தாமரைக்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் ச. பால்பாண்டி தலைமை வகித்தார் பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரபாகரன் அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி மாணவர்கள் நல்லபடியாக படித்து வாழ்க்கையில் நல்ல முன்னேறத்துக்கு வர வேண்டும் நன்றாக படிப்பது தான் உங்களின் வருங்கால சொத்து என்பதை மிக விளக்கமாக மாணவர்கள் நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி பேசினார் நிகழ்ச்சியில் தென்கரை பேரூராட்சி மன்ற தலைவர் வி. நாகராஜ் பள்ளி இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பங்கேற்று சிறப்பித்தனர்