ஸ்கூல் கேம்ஸ் ஃபெடரேஷன் ஆப் இந்தியா சார்பாக நடைபெற்ற தேர்வு போட்டியில் தேசிய போட்டிக்கு கோவையை சேர்ந்த தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி மாணவர்கள் தேர்வு பெற்று அசத்தியுள்ளனர்..
கடந்த 28,29 ஆகிய தேதிகளில் சிவகங்கை மாவட்டத்தில் அரசு பள்ளிக் கல்வித் துறையின் SGFI கராத்தே மாநில போட்டி நடைபெற்றது.. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வீரர்,வீராங்கனைகள் பலர் இதில் கலந்து கொண்டனர்..
இதில் கோவையை சேர்ந்த தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமியில் கராத்தே பயிற்சி பெற்று வரும் கோவை அரசுப் பள்ளியில் பயிலும் மாணவி தமிழரசி 19 வயது உட்பட்டோருக்கான – 40 என்ற எடை பிரிவிலும் மற்றும் கோவை ஆஸ்ரம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயிலும் மாணவி யுத்திக்கா 17 வயதுக்குடோருக்கான – 36 என்ற எடை பிரிவிலும் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளனர் வெற்றி பெற்ற மாணவர்களை தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமியின் நிறுவனர் சென்சாய் சதீஸ் அவர்கள் பாராட்டி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்..
வெற்றி பெற்ற மாணவிகள் இந்திய அரசு பள்ளி விளையாட்டு குழுமம் நடத்தும் தேசிய கராத்தே போட்டியில் தமிழ்நாடு அணி சார்பாக பங்கு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது..