தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திங்கட்கிழமை கலசலிங்கம் 24 நுண் கலைவிழா மாவட்ட தலைநகரான தேனியில் மக்களின் நன்மதிப்பை பெற்றவரும் மிகச்சிறந்த கல்வி நிறுவனம் நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அடிக்கடி நடப்பது வழக்கம் இதன்படி திங்கட்கிழமை கலசலிங்கம் 24 என்ற தலைப்பில் கல்லூரியின் கூட்ட அரங்கான காமராஜர் அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது
கல்லூரியின் செயலாளர் கே எஸ் காசி பிரபு அனைவரையும் வரவேற்று பேசினார் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவரும் நாடார் சரஸ்வதி கல்வி குழும நிறுவனங்களின் தலைவருமான கல்வி தந்தை டி ராஜமோகன் தலைமை உரையாற்றினார் உப தலைவர் பி.பி. கணேஷ் பொதுச்செயலாளர் எம் எம் ஆனந்தவேல் பொருளாளர் எம் பழனியப்பன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து உரையாற்றினார்கள்
கல்லூரியில் இணைச் செயலாளர்கள் எம்.அருண் ஏ எஸ் எஸ் எஸ் செண்பகராஜன் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். சித்ரா அகடமிக் டீன் முனைவர் ஏ கோமதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் கல்லூரி நுண்கலை விழா ஒருங்கிணைப்பாளர் முனைவர் எஸ் செல்வ பிரியா விழாவின் தாரக மந்திரமான நுண் கலை விழா பற்றிய அறிக்கையை வாசித்தார்
விழாவில் சிறப்பு விருந்தினராக தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயனுள்ள கருத்துக்களை பேசினார்கள் கல்லூரி மாணவியர்கள் நடத்திய கண்ணை கவரும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சாகசங்களை சிறப்பு விருந்தினர்கள் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் கண்டு கழித்து மகிழ்ந்தனர். கல்லூரியின் தேர்வு கட்டுப்பாடு அலுவலர் முனைவர் ஏ. சரண்யா நன்றி உரையாற்றினார்.