திருக்காஞ்சி ஏரி தாங்கள் பகுதியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட மகளிர் துணையுடன் பூரணாங்குப்பம் தனசுந்தரம்மாள் சாரி டெபிள் சொசைட்டி, மண்வாச இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து, பனை விதை நடவு நிகழ்வு நடைபெற்றது,
நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அதிகாரி திரு.கார்த்திகேயன் இணை அதிகாரி திரு.கலைமதி பொறியாளர்கள், ராமன், ராமச்சந்திரன், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் தனலட்சுமி செவிலியர், மகாலட்சுமி, அங்கன்வாடி ஆசிரியை கீதா மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை கிராம நல ஊழியர் திரு .ராஜ்குமார் செய்தார், மற்றும் தன சுந்தராம்பாள் சாரி டெபுள் சொசைட்டி தன்னார்வலர் கோபிநாத், அபிமன்யு, மண்வாசம் இளைஞரணி மன்றம் தலைவர் ஆறுமுகம் செயலர்,லிங்கேஸ்வரன், அரவிந்தகுமார், நித்திஷ், கமலக்கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
இதில் சுமார் 3000 பண விதைகள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு பனை விதை நடவு செய்தனர், திருக்காஞ்சி கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் பங்கு பெற்றனர்