புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை, நவ தர்ஷன் திரைப்பட கழகம், மற்றும் அலையன்ஸ் பிரான்சேஸ் இணைந்து நடத்திய இந்திய திரைப்பட விழா அலையன்ஸ் பிரான்சேஸ் கலையரங்கத்தில் 04–10 –2024 முதல் 08–10–2014 வரை தினமும் மாலை 6 மணிக்கு மேல் திரையிடப்பட உள்ளது
அதன் தொடக்க விழா வெள்ளிக்கிழமை மாலை முதலமைச்சர் என். ரங்கசாமி அவர்கள் விழாவினை தொடங்கி வைத்து 2022 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்துக்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருதினை குரங்கு பெடல் தமிழ் திரைப்பட இயக்குனர் எஸ். கமலக்கண்ணன் அவர்களுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்,
பொதுப்பணித் துறை அமைச்சர் மாண்புமிகு க லட்சுமி நாராயணன் செய்தி மற்றும் விளம்பரத்துறை அரசு செயலாளர் ஆர். கேசவன் ஐஏஎஸ் நவ தர்ஷன் திரைப்பட கழக செயலாளர் டாக்டர் எம். பழனி அலையன்ஸ் பிரான்சேஸ் தலைவர் டாக்டர் சதீஷ் நல்லா ம் வாழ்த்துரை வழங்கினார்கள்
முன்னதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குனர் என் தமிழ்செல்வன் குரங்கு பெடல் திரைப்பட இயக்குனர் எஸ். கமலக்கண்ணன் ஏற்புரை நிகழ்த்த இறுதியில் மு.தனசேகரன் நன்றி உரை கூறினார்
இத்திரைப்பட விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், வங்காளம்,ஹிந்தி,திரைப்படங்கள் வெளியிடப்படுகிறது மேலும் புதுச்சேரி பன்முக நடிகர்கள் சங்கத்தின் சார்பாக சிறப்பு விருந்தினர்களை மேளதாளங்களுடன் அரங்கிற்கு அழைத்து சென்று நடிகர் சங்கத்தின் தலைவர் செல்வம், பொருளாளர் ராஜ்குமார், சிங்காரம், கலைமாமணி நந்தகோபால் மற்றும் ஏராளமான புதுவை கடலூர் பகுதிகளை சேர்ந்த திரைப்பட கலைஞர்கள் கலந்து கொண்டார்கள் புதுச்சேரி அரசு சார்பில் குரங்கு பெடல் பட இயக்குநர் கமலக்கண்ணன் அவர்களுக்கு முதலமைச்சர் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும் சிறப்பு பரிசும் வழங்கி சிறப்பித்தார்