போடி நகராட்சி ஆணையாளர் பதவி உயர்வு பெற்று மாநகராட்சி உதவி ஆணையாளருக்கு வழியனுப்பும் விழா தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த கா. ராஜலட்சுமி பதவி உயர்வு பெற்று மாநகராட்சி உதவி ஆணையாளராக பொறுப்பேற்க உள்ளார்
அவருடைய பதவி உயர்வுக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பும் விழா நகராட்சி அலுவலக வளாகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது
இந்த விழாவிற்கு நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் தலைமை வகித்தார் நகராட்சி பொறியாளர் வி குணசேகரன் மேலாளர் முனிராஜ் நகர் மன்ற துணைத் தலைவர் கிருஷ்ணவேணி பச்சையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் அனைத்து நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஆணையாளர் கா .ராஜலட்சுமி அவர்களை வாழ்த்தி பேசினார்கள்.
ஏற்புரை ஆற்றிய நகராட்சி ஆணையாளராக இருந்து பதவி உயர்வு பெற்று உதவி ஆணையாளராக பொறுப்பேற்க உள்ள கா ராஜலட்சுமி பேசும் போது நான் போடி நகராட்சி ஆணையாளராக பணியாற்றிய போது எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்த அனைத்து நகராட்சி அதிகாரிகளுக்கும் மற்றும் பணியாளர்களுக்கும் என் பதவி உயர்வுக்கு வாழ்த்து தெரிவித்து என்னை வழியனுப்புவதற்கு விழா நடத்தி எனக்கு பெருமை சேர்த்த நகர் மன்ற தலைவர் துணைத் தலைவர் பொறியாளர் மேலாளர் மற்றும் அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மிக உருக்கமாக பேசினார்.
விழாவில் நகர் மன்ற உறுப்பினரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான எம் சங்கர் கட்டிட ஆய்வாளர் சுகதேவ் வருவாய் அலுவலர் ஜலாலுதீன் சுகாதார அலுவலர் மணிகண்டன் கணக்காளர் பிரேமா உள்பட நகராட்சி அதிகாரிகள் பணியாளர்கள் அனைத்து நகர் மன்றஉறுப்பினர்கள் மற்றும் நகர சமூக ஆர்வலர்கள் தன்னார்வலர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் திருப்பதி நன்றி உரையாற்றினார்