வீரிருப்பு கிராமத்தில் மருத்துவ முகாம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா வடக்கு புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட வீரிருப்பு கிராமத்தில் வைத்து கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமை வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலை குமார் துவங்கி வைத்தார்.
வீரிருப்பு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயா சண்முகராஜ், துணைத் தலைவர் முருக லட்சுமி, கவுன்சிலர் ராமலட்சுமி கருத்த பாண்டி,வழக்கறிஞர் ராமராஜ், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணைச் செயலாளர் முருகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் பாலகுமார், மருத்துவர்கள் சரவணகுமார், மகாதேவி, சிவசங்கரி,
கோவிந்தராஜ்,சித்த மருத்துவர் செல்வராணி ஆகியோர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில்
வட்டார சுகாதார பார்வையாளர் சமுத்திரம்,சுகாதார ஆய்வாளர்கள் முத்துப்பாண்டி, ஆனந்தராஜ், சின்னத்தம்பி, கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் அனைத்து மருத்துவமனை பணியாளர், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.