கடம்ப வீதி சிறு குறு தொழில் முனைவோர்கள் விழா” கடம்ப வீதி நிறுவனர் மகேஸ்வரி தலைமையிலும், சந்திரசேகர் முன்னிலையிலும் சிறப்பு விருந்தினராக தமிழக காவல்துறை உதவி ஆணையர் சண்முகம் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து இயற்கை உணவுகள், இயற்கை மூலிகை மருந்துகள், வீட்டு தயாரிப்புகள் என பல வகை சிறு குறு தொழில் முனைவோர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறினார்.
உடன் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, எழுத்தாளர் விவேக் ராஜ், மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா, குழந்தை நட்சத்திரம் லியானா, ஆர்கேஸ்னர் சித்ரா மற்றும் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசும், உணவுகளும் வழங்கப்பட்டது.