கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
கும்பகோணத்தில் 10 மணி நேரத்தில் 10 டிசைன்கள் பத்து நிகழ்வுகள் லண்டன் புக் ஆப் ரெக்கார்டிங் ( London book of world record ) ல் இடம் பெற்று உலக சாதனை படைத்த பெண் ஆடை வடிவமைப்பாளர் திவ்யா……

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் கும்பகோணத்தில் முன்னணி மகளிர் ஆடை வடிவமைப்பு நிறுவனமான யாழினி பிளவுஸ் டிசைனர் சார்பில் 10 மணி நேரத்தில் 10 டிசைன்கள் 10 நிகழ்வுகள் செய்து சாதனை படைத்த காண்போரின் கண்முன்னே நிறுத்தி லண்டன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்டில் மகளிர் ஆடை பிளவுஸ் வடிவமைப்பாளரான திவ்யா இடம்பெற்று சாதனை படைத்துள்ளார்.
அதன் நிகழ்வுகளை பார்வையாளர்கள் முன்பு பெண் குழந்தை பிறப்பு முதல் காதணி விழா மஞ்சள் நீராட்டு விழா பட்டமளிப்பு விழா நிச்சயதார்த்த விழா வரவேற்பு விழா திருமண விழா வளையன விழா அறுபதாவது திருமண விழா என பல்வேறு விழாக்களில் பெண்கள் ஐந்து முதல் 60 வரை பயன்படுத்தும் பிளவுசை ஒரு இடத்தில் 10 நிகழ்வுகளாக யாழினி பிளவுஸ் டிசைனர் திவ்யா வெங்கடேஷ் பத்து டிசைன்களை 10 மணி நேரத்தில் செய்து காட்டி சாதனை படைத்துள்ளார்.
அந்த நிகழ்வு காண்போர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் கல்லூரி மாணவிகள் நிறுவன ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.