சென்னை மயிலாப்பூரில் வைத்து நடைபெற்ற ஸ்டார் ஃபிக்ஸ் எக்ஸ்லேண்ட் விருதுகள் வழங்கும் விழாவில் கடையம்/ இரவணசமுத்திரம் சாதனைச் சுடர் விருது பெற்ற ஷாஜிதா, சிங்கப்பெண் விருதுப் பெற்ற மிஸ்பா ஆகிய சகோதரிகளுக்கு
மிக சிறந்த சாதனையாளர்கள் விருதுகள் தமிழக அமைச்சர் முத்துசாமி வழங்கி கௌரவித்து வாழ்த்தினார்.
சென்னை மயிலாப்பூர் தனியார் நட்சத்திர விடுதியில் வைத்து ஸ்டார் ஃபிக்ஸ் நிறுவனம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது .
இதில் யோகாவில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தும் பல்வேறு வகையான சாதனை சான்றிதழ்கள்,பல விருதுகள் தொடர்ந்து பெற்று வந்தும் யோகா ரோலர் ஸ்கேட்டிங்கில் போட்டிகள் மட்டுமில்லாமல் பல சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் தென்காசி மாவட்டம் கடையம் அடுத்த இரவணசமுத்திரம் ஊரைச் சேர்ந்த குற்றாலம் செய்யது பள்ளி ஸ்காலர்ஷிப் பெற்று ஆறாம் வகுப்பு பயிலும் மாணவி ஷாஜிதா ஜைனப்,வாசுதேவ நல்லூர் எஸ்.தங்கப்பழம் யோகா இயற்கை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மாணவி (பி.என்.ஒய்.எஸ்) மிஸ்பா நூருல் ஹபிபா ஆகிய இச்சகோதரிகளுக்கு இவர்களது குடும்ப ஏழ்மை நிலையிலும் பல சாதனைகளை செய்து வருவதற்கு பாராட்டும் விதமாக சென்னை ஸ்டார் ஃபிக்ஸ் நிறுவனம் மிகச்சிறந்த சாதனையாளர்கள் விருது வழங்கி கௌரவித்தது,
இந்த அக்கா, தங்கை மளிகைகடை ஊழியரான முகம்மது நஸீருதீன்-ஜலிலா தம்பதியரின் மகள்கள் ஆவர். ஸ்டார் ஃபிக்ஸ் நிறுவனர் கதிர் வேல் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சிக்கு தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்,
உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி சி.எஸ் கர்ணன்,நக்கீரன் கோபால், மற்றும் முக்கிய அரசியல், சினிமா
பிரபலங்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இதில் யோகா, ஸ்கேட்டிங் பயிற்சி ஆசிரியர் குரு கண்ணன்,சமூக ஆர்வலர் சேக் முகம்மது அலி மற்றும் சகோதரிகள் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
மேலும் சாதாரண குடும்பத்தை சார்ந்த இந்த சாதனை அக்கா,தங்கைக்கு தமிழக அரசின் மாநில விருது, மத்திய அரசின் தேசிய விருது பெறும் வகையில் இவர்களை மேலும் ஊக்கப்படுத்த மாவட்ட நிர்வாகம். அரசிற்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள்,விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களின் கோரிக்கையாக எழுந்துள்ளது.