விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டம், வடக்கு வெங்காநல்லூர் கிராமம், பராசக்தி நகர் பகுதியில் வசித்து வரும், கடல்சார் பொறியாளரும் மற்றும் சமூக ஆர்வலருமான ஆர். மதுசூதனன் தலைமையிலும், நிதிப் பங்களிப்புடனும்
புவி வெப்பமயமாதலினைத் தடுத்தல் மற்றும் சுற்றுச் சூழலினைப் பாதுகாத்தல் முன்னிட்டு,ராஜபாளையம் வட்டம், கடம்பன் கிராமம், கடம்பன்குளம் கண்மாய் கரைகளில் சுமார் 10000 (பத்தாயிரம்) பனை விதைகள் நடுவதற்காக பனை விதைகள் நடப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூர் நெடுஞ்சாலைகள் (திட்டங்கள்) (நில எடுப்பு) தனி வட்டாட்சியரும்,ராஜபாளையம் எவர்கிரீன் கிரௌத் சொல்யூஷன் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலருமான, எம். ரங்கசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு,
பனை விதைகள் நடுதல் பணிகளைத் துவக்கி வைத்தார். பனை விதைகள் நடுதல் நிகழ்ச்சியில், அழிசோடை தலைமையிலான
விவசாயிகள் நலக் குழு உறுப்பினர்கள் சுமார் 15 (பதினைந்து) நபர்கள் ஒத்துழைப்புடன் பனை விதைகள் நடும் பணிகள் மேற்கொள்ளப் பட்டது.