கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
கும்பகோணம் அருகே அரசு பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவி பேருந்திலிருந்து கீழே விழுந்து படுகாயம் …..
அக்கம்பக்கத்தினர்
மாணவியை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதி……
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநறையூரில் குடவாசல் கீழத்தெருவை சேர்ந்த ரவிக்குமார் என்பவரின்
( 15 வயது) மகள் சூரியராகவி நாச்சியார் கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் மாலை பள்ளி முடிந்தவுடன் கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் அரசு பேருந்தில் ஏறி உள்ளார்.
அப்போது திருநறையூர் வளைவில் திரும்பிய போது மாணவி திடிரென்று பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.
உடனே பேருந்து நிறுத்தப்பட்டு அக்கம் பக்கத்தினர்கள் மற்றும் பேருந்து பயணிகள் மாணவியை மீட்டு ஆட்டோவில் ஏற்றி அருகில் இருந்த நாச்சியார் கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்து பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் உள்ளே செல்ல இடமின்றி பஸ் படிக்கட்டில் பயணம் செய்ததால் கீழே விழுந்துள்ளார். பள்ளி கல்லூரி நேரங்களில் தமிழக அரசும் போக்குவரத்து துறையும் மாணவர்கள் நலன் கருதி பேருந்து கூட்ட நெரிசலை சமாளிக்க அதிக பேருந்துகளை கூடுதலாக இயக்கினால் மாணவ மாணவிகளுக்கு இது போன்ற விபத்துக்கள் தடுத்திடவும் உயிருக்கு ஆபத்து ஏற்படா வண்ணம் இருக்கும் எனவும் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.