திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வெள்ளைச்சாமி தற்போது ஓய்வு பெற்றுள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு சார்பு ஆய்வாளராக இருக்கும்போது வழக்கில் முத்துமணி என்பவரின் பெயரை விடுவிப்பதற்காக ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெறும்போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் இவ்வழக்கு தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோரின் முயற்சியால் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அவர்கள் வெள்ளைச்சாமிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.