தமிழகத்தில் உள்ள தென்னை விவசாயிகளை விவசாயத்தை பாதுகாத்திட ரேஷன் கடைகள் மூலமாக தேங்காய் எண்ணெயை மானிய விலையில் வழங்கக்கோரி தமிழக தழுவிய தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் ஒன்றிய தலைவர் அப்பாஸ், ஒன்றிய செயலாளர் கணேசன் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் என்.ஏ. இராமச்சந்திர ராஜா துவக்கி வைத்தார்.
சேத்தூர் தென்னை விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் சீதாராமன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகி தோழர் பெருமாள், வத்ராப் ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம், பழனிச்சாமி, மாவட்ட பொருளாளர் ராமராஜ் உள்ளிட்ட தலைவர்கள் விளக்கிப் பேசினார்கள். மாநில பொதுச் செயலாளர் ஏ.விஜய முருகன் நிறைவுரையாற்றினார். ஏராளமான தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர்.