தேனி வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் எம்பி தலைமையில் நடந்தது. தேனி மாவட்டம் தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு
மாவட்ட அவைத் தலைவர் பி.டி செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார்
திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் ஜி.பி. ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2026 இல் வரும் சட்டசபை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி பேசினார் மேலும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கே எஸ் சரவணகுமார் அனைவரையும் வரவேற்று பேசினார்
பெரியகுளம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் முன்னாள் எம் எல் ஏ.வும் மதுரை மாவட்ட திமுக இளைஞரணி செயலாளர் முத்துராமலிங்கம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் மாநில வர்த்த க அணி துணை செயலாளர்
நேரு பாண்டியனை அறிமுகம் செய்து வைத்தது பேசிய வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பேசும்போது
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பல்வேறு முத்தாய்ப்பான நலத்திட்ட பணிகளை தமிழக மக்களுக்கு செய்து தமிழக மக்களின் நன் மதிப்பைப் பெற்று வரலாற்று சாதனை படைத்து வருகிறது
துணை முதல்வர் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மக்களின் குறைகளை தீர்க்க சிறந்த முறையில் செயலாற்றி வருகிறார் தமிழகத்தின் மாபெரும் வரலாற்று கூட்டணியை உருவாக்கிய தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் அமைத்துள்ளோம் இதனை பயன்படுத்தி நாம் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் பெரியகுளம் மற்றும் போடிநாயக்கனூர் கம்பம் ஆண்டிபட்டி உள்பட தமிழக முழுவதும் 234 க்கு. 234 தொகுதிகள் முழுவதும் வென்று வரலாற்று சாதனை படைக்க வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் பாடுபட வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்
இந்த கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளுக்கான ஏற்பாடுகள் குறித்தும்
புதிய வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்களில் சேர்த்தல் நீக்கல் பணிகள் முழு வீச்சில் நடத்தி சிறப்பாக வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன
கூட்டத்தில் திமுக வடக்கு மாவட்ட அனைத்து நிர்வாகிகள்
நியமனம் வடக்கு மாவட்ட திமுகவிற்கு புதியதாக வங்கி கணக்கு துவங்குவது மற்றும் திமுக வடக்கு மாவட்டத்தில் திமுக தீவிர வளர்ச்சி பணிகள் குறித்து உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இக்கூட்டத்தில் மாநில மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக வார்டு மற்றும் கிளை திமுக நிர்வாகிகள் சார்பு அணியின் நிர்வாகிகள் உள்ளாட்சி மன்ற தலைவர்கள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் திமுகவின் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் கலந்து கொண்டனர்.