திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் பணகுடியில் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இலவச பொது மருத்துவ முகாம் தமிழக சபாநாயகர் அப்பாவு துவக்கி வைத்தார்
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம்
திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் ராதாபுரம் வட்டம்
பணகுடி பேரூராட்சி 1-வது வார்டு ஸ்ரீ ரெகுநாதபுரம் நதிப்பாறை ஊர் மக்களும் நாகர்கோவில் ஜோசப் சகாயம் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையும் இணைந்து நடத்திய இலவச பொதுமருத்துவ முகாம், இன்று காலை 9 மணி முதல், மதியம் 1 மணி வரை இடைவெளியின்றி நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சரின்விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த பொது மருத்துவ முகாமினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் மு.அப்பாவு குத்துவிளக்கு ஏற்றி, துவக்கி வைத்தார்.
பணகுடி பேரூராட்சி மன்றத்தலைவி த.தனலட்சுமி முன்னிலை வகித்தார். துவக்க நிகழ்ச்சியில்,பணகுடி பேரூர் திமுக செயலாளர் தமிழ்வாணன் மாவட்ட திமுக பிரதிநிதி மாணிக்கம் ஒன்றிய கவுன்சிலர் கோசிஜின் திமுக அவைத் தலைவர் மாடசாமி துணைச் செயலாளர் ஜெயராஜ் ஒன்றிய பிரதிநிதிகள் கோபால் தாமஸ்குமார் மதிமுக நிர்வாகி சங்கர் பணகுடி பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆனந்தி சொரிமுத்து பூங்கோதை உட்பட பலர் பங்கேற்றிருந்தனர். முகாமில் பணகுடி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து முந்நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்
முகாமிற்க்கான ஏற்பாடுகளை 1-வது வார்டு கவுன்சிலரும், மாவட்டத் திட்டக்குழு உறுப்பினருமான கோபி.கோபால கண்ணன், மிகச்சிறப்பாக செய்திருந்தார்.