காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட புதுத்துறை பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள செங்கழுநீர் தீர்த்தக்குளத்தை மேம்படுத்த சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 23-இலட்சம் 65-ஆயிரம் மற்றும் காரைக்கால் கடற்கரையில் பாலூட்டும் தாய்மார்களுக்கு அறை கட்டுவதற்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 9-இலட்சம், காரைக்கால் மகாத்மா காந்தி சாலை மற்றும் சர்தார் வல்லபாய் படேல் சாலை சந்திப்பில் கடற்கரையில் சாலையோர பூங்கா அமைப்பதற்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 8-இலட்சம் 62-ஆயிரம் திட்ட மதிப்பீட்டிலான பணிகளைநாஜிம், ML A துவக்கி வைத்தார்கள்
இந்த நிகழ்வில் காரைக்கால் நகராட்சி உதவி பொறியாளர் திரு. லோகநாதன், இளநிலை பொறியாளர் திரு.ஜோதிபாஸ் மற்றும் அப்பகுதி முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்..!