புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்குள் உள்ள சுப்பையா சாலையில் அமைந்துள்ள குபேர் திருமண மண்டபம் ₹69,75,078 செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் சுப்பராய பிள்ளை அறக்கட்டளை நிதியிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி முன்னதாக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. V. அனிபால் கென்னடி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பல ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி நகராட்சியால் கட்டப்பட்ட இந்த மண்டபம், உப்பளம், வாணரப்பேட்டை, நேதாஜி நகர், வம்பாகீரப்பாளையம், சின்னக்கடை, கோலாஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் குறைந்த செலவில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில் பயன்பட்டு வருகிறது. இந்த மண்டபத்தை மேலும் வசதிகளுடன் மேம்படுத்த திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் சட்டமன்றத்தில் தொடர்ந்து முயற்சி செய்ததன் பலனாகவே இந்த மேம்பாட்டு பணி தொடங்கப்பட்டது.
ஆனால், பணி தொடங்கி இரண்டு ஆண்டுகள் கடந்தும் இதுவரை பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில், சட்டமன்ற உறுப்பினர் நேரில் சென்று பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அவர் அதிகாரிகளிடம், ஒரு வாரத்திற்கு பணிகள் இரவு பகல் பாராமல் முடித்து மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டு கொண்டார். இந்தாவாரதில் தேதி திட்டமிட்டு திறப்பு விழா செய்துவிடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. உடன் தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர் ராகேஷ், நேதாஜி நகர் 3 பஞ்சாயத் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.