தென்காசி அருகே உள்ள துரைச்சாமியா புரத்தில் தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில் நாடார் சமுதாயத்தின் வரலாற்று விழிப்புணர்வு பிரச்சார விழா நாட்டான்மை அருணாசலம் நாடார் தலைமையில் நடைபெற்றது.
பொதுச் செயலாளர் ஜான் டேவிட், பொருளாளர் சுப்பிரமணியன், மேற்கு மாவட்ட தலைவர் குருசாமி நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சிவா, நிவேந்தன், நாகராஜன், குமரேசன் மற்றும் இளைஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் செல்வின் சமித் நன்றி கூறினார்.