தென்காசி அருகே உள்ள அய்யாபுரத்தில் உள்ள நூலகத்தில் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் இளைஞர்கள் இளம் பெண்களுக்கான சமுதாய சமூக மற்றும் கல்வி விழிப்புணர்வு விழா நவமணி தலைமையில் கந்தசாமி, திரவியம் ஆகியோர்கள் முன்னிலையில் நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் பொருளாளர் சுப்ரமணியன், மாநில செயற்குழு உறுப்பினர் இலஞ்சி கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள் முடிவில் மேற்கு மாவட்ட தலைவர் குருசாமி நன்றி கூறினார்.