தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் தேசிய அறக்கட்டளை (நேஷனல் டிரஸ்ட்) இல் உள்ளூர் குழு ( லோக்கல் லெவல் கமிட்டி ) சார்பில் 02 பயனாளிகளுக்கு மனவளர்ச்சி குன்றிய நபர்களுக்கான பாதுகாவலர் நியமனச் சான்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர். வழங்கினார்கள்.
மேலும், இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை. அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 410 மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏகே.கமல் கிஷோர். அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செல்வக்குமார். துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) ஷேக் அயூப் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.