திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தென் மண்டல ஐஜி பிரேம்ஆனந்த்சின்கா வருடாந்திர ஆய்வு மேற்கொள்வதற்காக வருகை புரிந்தார். அவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தென் மண்டல ஐஜி பிரேம்ஆனந்த்சின்கா அலுவலகத்தில் பணி புரியும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பொதுமக்களிடையே நற்பெயர் பெரும் வகையில் சிறந்த முறையில் பணி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், ASDP- கள், ASP, DSP-கள், தனிப்பிரிவு ஆய்வாளர், உதவி தனிப்பிரிவு ஆய்வாளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.