மேட்டுப்பாளையம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூச திருத்தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது திருவிழாவை முன்னிட்டு கடந்த 29.1 .2026 ஆம் ஆண்டு இரவு 8 மணி அளவில் கிராம சாந்தி நடைபெற்றது

அதை தொடர்ந்து 30. 1. 26 காலை 9.30 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு திருக்கல்யாணம், குதிரை வாகனத்தில் திருவீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெற்றது,

இதை அடுத்து .1.2.26 ஞாயிற்றுக்கிழமை காலை 11:30 மணி அளவில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் தேருக்கு எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து மாலை 4 மணி அளவில் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்,தேர் முக்கிய வீதிகளின் வழியாக வளம் வந்து மீண்டும் கோவிலை அடைந்தது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை மற்றும் விழா கமிட்டியினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *