கோவையில் தைப்பூசத்தை முன்னிட்டு கிருத்திகை நாதம் கூட்டு வழிபாட்டு பேரவை சார்பாக தொடர்ந்து எட்டாவது ஆண்டாக அனுவாவி சுப்பிரமணியர் கோவில் அடிவாரத்தில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.
தைப்பூசத்தை முன்னிட்டு கோவை கணுவாய் பகுதியில் உள்ள அனுவாவி சுப்பிரமணியர் திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது ஒவ்வொரு ஆண்டும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கிருத்திகை நாதம் கூட்டு வழிபாட்டு பேரவை நண்பர்கள் இணைந்து அன்னதானம் வழங்கி வருகின்றனர்..
இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு தைப்பூச விழாவை ஒட்டி, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது தொடர்ந்து எட்டாவது ஆண்டாக நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னதானம் பெற்றனர்…