பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் அமைந்துள்ள திஷா பள்ளியில் 2024 ஆம் ஆண்டிற்கான இந்திய பள்ளியின் விளையாட்டு கூட்டமைப்பு(SGFI) நடத்தும் 68 ஆவது தேசிய யோகாசன போட்டி கோலாகலமாக கலை நிகழ்ச்சியுடன் துவங்கியது.
இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுக்கான கவுன்சில் (CISCE) மற்றும் திஷா பள்ளி இணைந்து இப்போட்டிகளை நடத்துகின்றனர். இப்போட்டிகள் 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்காக நடைபெறுகிறது. இதில் சுமார் 25 மாநிலங்களில் இருந்து 200 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். இப்போட்டிகள் நேற்று முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
இப்போட்டிகளை ASISC அமைப்பின் தமிழ்நாடு பொது செயலாளர் டாக்டர் N K சார்லஸ் , CISCE ன் துணை நிதி செயலாளர் அர்ச்சித் பாசு, CISCE ன் விளையாட்டுத் துறையின் மேலாளர் அர்னவ் குமார் ஷா,இந்திய பள்ளியின் விளையாட்டு கூட்டமைப்பு நிர்வாகிகள் சதீஷ் சிங் மற்றும் அஜய் சாண்டல் , தமிழ்நாடு யூத் யோகா விளையாட்டு கழகத்தின் செயலாளர் ஜெயந்தி ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர். திஷா பள்ளியின் முதல்வர் உமா ரமணன் மற்றும் பொது மேலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.