விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் வைத்து ராக்கிங் ஒழிப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் எல். கணேசன் பொன்னாடை அணிவித்தார் விழாவில் ராஜபாளையம் வட்ட சட்டப் பணிகளுக்குள் தலைவர் மற்றும் சார்பு நீதிபதி மு சண்முகவேல்ராஜ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசும்போது கூறியதாவது: ‘இக்கல்லூரியில் முழுமையான அளவு ராக்கிங் இல்லாதது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகும். சக மாணவ, மாணவிகளை சமமாக பாவித்து பழகி வந்தாலே இதுபோன்ற நிலைகளை தடுத்து நிறுத்த இயலும். ராகிங் வழக்கு பதிவு செய்யப்பட்டால் அந்த நபர் உலக அளவில் எந்த நிறுவனத்திலும் வேலை பார்க்கவோ, எந்த கல்வி நிலையத்திலும் படிக்கவும் முடியாது. அந்த அளவுக்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளது- இவ்வாறு நீதிபதி சண்முகவேல் ராஜ் கூட்டத்தில் மாணவ மாணவிகள் இடையே பேசினார்.
பின்னர் நீதிபதி செய்தியாளர்களிடம் பேசும்போது,’ அகில இந்திய அளவில் 14,400 வழக்குகள் ரேக்கிங் சம்பந்தமாக பதிவு செய்யப்பட்டு அது ஆய்வுக்கு பின்னர் 1111 வழக்குகள் மட்டுமே வந்துள்ளது. மேலும் தீவிர விசாரணை ஆய்வுகள் நடத்தி பரிசீலனை செய்யப்படும். பல்வேறு நிலைகளிலும் ராக்கிங் குறைந்து வருவது பாராட்டத்தக்கதாக உள்ளது. தமிழகத்தில் எந்த பகுதியிலும் ஒரு ராக்கிங் கூட இல்லாத நிலை உருவாக்க வேண்டும் என்பதே நமது இலக்கு – இவ்வாறு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். விழாவில் பயிற்சி நீதிபதிகள் எம். ராமநாதன், எஸ்.அபிலா, டி. அபர்ணா தேவி மற்றும் கல்லூரியின் ராக்கிங் ஒழிப்பு உறுப்பினர் டி. சுப்பிரமணியன் உள்பட பலர் பேசினார்கள் முடிவில் துணை முதல்வர் ராஜ கருணாகரன் நன்றி கூறினார். விழாவில் கல்லூரியின் பொது மேலாளர் செல்வராஜ் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.