கரூர் செய்தியாளர் மரியான் பாபு


காய்கறி விற்பனை வண்டிகளை வழங்கிய முன்னாள் அமைச்சர்

கரூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் மூலம் 15 பயணாளிகளுக்கு ரூ.2.25 இலட்சம் மதிப்பீட்டில் நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்பாலாஜி வழங்கினார்.

மேலும் தோட்டக்கலைத்துறை சார்பாக தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ் 15 பயணாளிகளுக்கு தலா ரூ.15,000 மானியத்தில் நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகள் மற்றும் வேளாண்மைத்துறையின் சார்பாக விவசாயி ஒருவருக்கு தார்பாலினையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வீரபத்திரன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்(பொ) ராஜா, வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம், தோடக்கலைத் துறை துனை இயக்குநர் தியாகராஜன் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *