மேட்டுப்பாளையம் அருகே காரமடை எஸ்.வி.ஜி.வி மெட்ரிக் பள்ளியில் பள்ளியின் விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதற்கு பள்ளித் தாளாளர் பழனிசாமி தலைமை வகித்தார்.

பள்ளி முதல்வர் சசிகலா முன்னிலை வைத்தார். இதில் ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் தேவேந்திரன், கோவை மாவட்ட கால்பந்து சங்க செயலாளர் என்.பி.அனில்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர்.

பள்ளியில் கைப்பந்து, கால்பந்து, ஓட்டப்பந்தயம், கோகோ, தட்டு மற்றும் ஈட்டி எரிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில் நிர்வாக அறங்காவலர் லோக முருகன், செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ரத்தினசாமி, அறங்காவலர்கள் தாரகேஸ்வரி, எம்.ஆர்.ராஜேந்திரன், நிர்வாக அதிகாரி சிவ சதீஷ்குமார் உள்ளிட்டோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்களுடன் இணைந்து பரிசுகளை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி விளையாட்டு துறை ஆசிரியர்கள் செய்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *