திருவாரூர் அருகே நீலக்குடி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தென் மண்டல பல்கலைக்கழகத்துக்கான ஆடவர் கோக்கோ போட்டி டிசம்பர் 27 நடைபெற உள்ளது.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 27 முதல் டிசம்பர் 31 வரை தென் மண்டல பல்கலைக்கழககளுக்கான ஆடவர் கோக்கோ போட்டிகள் நடைபெற உள்ளது இந்தப் போட்டிகளை சுபாஷ் குமார் நிர்வாக இயக்குனர் கோக்கோ பெடரேஷன் 27 டிசம்பர் 27 வது தேதி அன்று காலை 8 மணி அளவில் துவங்கி வைக்கிறார் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் கிருஷ்ணன் தலைமை வைக்கிறார்.
ஐந்து நாட்கள் நடைபெற உள்ள, தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கான ஆடவர் கோகோ போட்டிகளில் 80 பல்கலைக்கழகங்கள் போட்டியிட பதிவு செய்துள்ளனர் நிகழ்வில் சுமார் 1000 முதல் 1200 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர் இந்தப் போட்டிகளை நடத்த நான்கு கொக்கோ மைதானங்கள் மற்றும் இரண்டு உள் விளையாட்டு அரங்கங்களிலும் கொக்கோ விளையாடுவதற்கான தளம் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளது
தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கான ஆடவர் கொக்கோ போட்டிகளில் தேர்ச்சி பெறும் அணி தேசிய போட்டிகளில் போட்டியிடுவதற்கான தேர்ச்சி பெறுவார்கள்.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு கல்வி துறையின் தலைவராக உள்ள பேராசிரியர் ஜெயராமன் நடைபெற இருக்கும் போட்டிகளுக்கான ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்
கடந்த ஆண்டு 2023 தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கான பெண்களுக்கான கோகோ போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்றது இதில் 62 பல்கலை கழகங்களிலிருந்து 930 விளையாட்டு வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.